ஒருவாரமாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதி

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் கடந்த ஒருவாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியினை சேர்ந்த இராசபல்லவன் தவறூபன் என்னும் தமிழ் அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தவகவல் வெளியிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒருவாரமாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதி

குறித்த அரசியல் கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தான் தப்பி சென்றுவிடக் கூடாது என்ற காரணத்திற்காக ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியில் இருந்து காலை 6 மணிவரைக்கும் ஒரு தனி அறையில் வைத்து தன்னை சிறை காவலர்கள் அடைத்துவிடுவார்கள்.

அவ்வறையில் சிறுநீர் கழிப்பதற்கு ஒரு போத்தலும், மலம் கழிப்பதற்கு ஒரு தட்டும் தரப்படும். காலையில் சிறுநீரையும், மலத்தினையும் நானே அகற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அவரை மனிதத்துவத்திற்கு அப்பால் சென்று சிறைக் காவலர்கள் வதை செய்கின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களும் மௌனமாக உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அரசியல் கைதியின் கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.