புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களில் புள்ளியிடல் முறையை அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார்.
ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது, 100 புள்ளிகள் இடப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
போக்குவரத்து குற்றங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்தில் புள்ளிகளைக் குறைக்கத் தீர்மானிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தில் பூஜ்ஜிய புள்ளி இருக்கும்போது, அது பயன்படுத்த முடியாததாகக் கருதப்படும் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் வணிக மற்றும் வணிகம் சாராதது என சாரதி அனுமதிப்பத்திரத்தை இருவகையாக அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார்.