இலங்கை தமிழருக்கு பெருமை சேர்த்த ஈழத்துபெண்! குவியும் பாராட்டுக்கள்

கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக நியமனம் செய்துள்ளது.

இவர் வன்னி மண்ணை சொந்த இடமாக கொண்டதுடன் 2010ற்கு பின்பு தான் புலம் பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தாயகத்தில் சிறு வயதில் இருந்தே பல சமூக சேவைகளை முன்னெடுத்து வந்ததுடன், கனடாவில் குடியேறிய பின்னரும் அந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர் ஆவார்.

அவரது கடின உழைப்பினால் கிடைத்த இந்த பொறுப்பான பதவி அவரை விட, எமது இனத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

ஈழத்து தமிழருக்கு பெருமை சேர்த்த அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நாமும் அவருடன் சேர்ந்து இந்த பாதையில் அவர் வெற்றி பெற உறுதுணையாய் இருப்போம் என மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன் தெரிவித்துள்ளார்.