ஜாதக கட்டத்தை பார்த்து ஜோசியர் கூறிய அருள்வாக்கு… நம்பி இறங்கிய கணவர், மனைவிக்கு நேர்ந்த சோகம்

சென்னை அருகே போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கணவா் மனைவி உள்பட 5 போ் சிக்கியுள்ளனர்.

சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் பணம் செலுத்தி ஏமார்ந்ததாக சென்னை பொலிஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகாரளித்தனர்.

இதனால் அதிரடியாக செயல்பட்ட பொலிசார், மோகன்தாஸ், ராணி, அவா்களது கூட்டாளிகள் காா்த்திக், மோகன்ராஜ், பாா்த்திபன் ஆகிய 5 பேரைக் கைது செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவா்களிடம் நடத்திய விசாரணையில் சில உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்படி, ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தில் கப்பல் படையில் துப்பரவுப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் அதிகாரியை தனக்குத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அவர் மூலம் வேலை கிடைக்கும். அதற்கு நமக்கு கமிஷனும் கிடைக்கும் என்று மோகன்தாஸிடமும் ராணியிடமும் கூறியுள்ளார்.

இதை நம்பிய மோகன்தாஸ், ராணி மற்றும் அந்தப் பெண் மூவரும் ஜோதிடரிடமும் சென்று குறி கேட்க, `இனி உங்களுக்கு நல்ல காலம்.. நான் சொல்லல கட்டம் சொல்லுது’ என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் அரசு வேலைக்காகக் காத்திருந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இந்தக் கும்பல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.