பொது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.

தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளிலும் பயணிப்பதற்க்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதற்கமைய உடன் அமுலாகும் வகையில் சகல அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.