யாழ். தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் சுயதனிமைப்படுத்தல்!

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது நண்பரும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தாயார் கொரோனா தொற்று பரவிய ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தாயாரும், குடும்பத்தாரும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் குறித்த பெண்ணும் அவருடைய நண்பரும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் யாழ். மாநகரசபையின் சுகாதார பிரிவுக்கு தெரியவந்த நிலையில் அந்த பெண் தங்கியுள்ள இடத்திலும், அவருடைய நண்பர் பணிபுரியும் யாழ். கோட்டையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், மக்கள் பீதியடையாமல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு யாழ். மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.