பல நகரங்களில் முண்டியடிக்கும் மக்கள் – அரிசி, எரிபொருளுக்காக.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் என்று நினைத்து பல கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச்செல்லும் முயற்சியில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கொழும்பின் புறநகராகிய பாணந்துறையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

அதேபோல நாட்டின் பல பிரதேசங்களிலும் பல்பொருள் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் அதிகளவான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.

அத்துடன் பல நகரங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.