யாழ் கோப்பாய் கல்வியியல் கல்லூரி நாளை இராணுவத்தால் பொறுப்பேற்பு! மாணவர்கள் வெளியேற்றம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதயடுத்து, நாடு முழுவதுமுள்ள கல்வியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது.

தற்போது சுமார் 400 ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கோப்பாயில் கல்வி கற்று வருகிறார்கள்.

அவர்கள் அனைவரும் நாளை அங்கிருந்து வீடுகளிற்கு அனுப்பப்படவுள்ளனர்.

கொரோனா தொற்று அபாயமுள்ளதால் மாணவர்களை பாதுகாப்பாக இராணுவத்தினரே வீடுகளிற்கு அனுப்பி வைக்கவுள்ளனர். அண்மையிலுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் வந்து அழைத்து செல்லவும், தூர இடங்களில் உள்ளவர்கள் இராணுவத்தினரால் பேருந்துகளிலும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.