ஒரே நேரத்தில் இரு காதலர்கள்; யாழ் யுவதிக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றின் மாணவியொருவர், தமது பிரதேசத்தை சேர்ந்த பிறிதொரு உயர்கல்வி நிறுவனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

அவருடன் சில காலமாக இந்த காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில், யுவதி தன்னுடன் கூட படிக்கும் கிளிநொச்சி பகுதி இளைஞன் ஒருவருடனும் காதல் தொடர்பை பேணியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று , புதிய காதலனும் அந்த யுவதியும் புறநகர் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு செல்வதை அறிந்த பழைய காதலன், தனது நண்பர்களுடன் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.

அத்துடன் இதன்போது புதிய காதலன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , உணவக பணியாளர்கள் மற்றும் உணவருந்த வந்த சிலர் ஒன்று சேர்ந்து பழைய காதலனையும், நண்பர்களையும் பிடித்து வெளியேற்றியுள்ளதாக கூரப்படுகின்றது.

மேலும் இந்த ரகளையில் உணவகத்தில் இருந்த சில பொருட்களுக்கு நக்ஷ்டம் ஏற்பட்டதை அடுத்து அவற்றிற்கான பணத்தை யுவதியும், புதிய காதலனும் செலுத்தி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வளரும் இளம் சமூகங்களின் இவ்வாறான செயல்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளிட்டுள்ளனர்.