வடமாகாண ஆளுநர் மத்திய மாகாணத்திற்கு மாற்றம்!

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இடமாற்றம் வழங்கப்பட்டார். இதனால் வடக்கு மாகாண ஆளுநருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராக வருவதற்கு விருப்பம் தெரிவித்த கே.சி.லோகேஸ்வரன், வடமேல் மாகாண ஆளுநராக மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர்.

1. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
2. கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
4. ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
5. மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
6. எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
7. பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like