வல்லையில் கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்: ஒருவர் படுகாயம்! (Video)


யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலிப் பக்கமாகவிருந்து நெல்லியடிப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக ஹன்ரர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பாலத்தில் சறுக்கி அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹன்ரர் வாகனச் சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.Get real time updates directly on you device, subscribe now.

You might also like