கம்பஹாவில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவிக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், குறித்த மாணவியின் தந்தை மினுவாங் கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற் சாலையில் பணி புரிந்தபோது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மினுவங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி குறித்த தகவலை பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.
மற்றும், குறித்த மாணவியோடு கல்வி கற்ற 12ஆம் தர மாணவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது