வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர் இவரா?.. எப்போது தெரியுமா?

பிக்பாஸ் தமிழில் நான்காவது சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது மொத்தம் 16 போட்டியாளர்களுடன் இந்த ஷோ துவங்கிய நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

இந்த நிலையில், அதிகம் வெளியேற்றப்படுவதில் சனம் ஷெட்டி பெயரே அடிபடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக் பாஸ் 4 வீட்டுக்கு வைல்டு கார்டு என்ட்ரி ஆக வரப்போகிறார் என தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசன் துவக்க நிகழ்ச்சி அன்றே அவர் போட்டியாளராக வர வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனாலும், கடைசி நேரத்தில் அர்ச்சனா பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

அவர் வேறு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் நிலையில் அதன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார் என கூறப்பட்டது.

இந்நிலையில், திரும்ப வைல்டு கார்டு என்ட்ரி ஆக வர இருக்கிறார் என தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

அர்ச்சனா தற்போது தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் வீட்டுக்கு அவர் வர வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

அனேகமாக இந்த வார இறுதியில் கமல்ஹாசன் அவரை வரவேற்று பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு இருக்கிறது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles