உயர்தரப் பரீட்சையின் போது ஸ்மார்ட் கடிகாரம் பயன்படுத்திய மாணவன்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது ஸ்மார்ட் கடிகாரமொன்றை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவனை பரீட்சை நிலைய அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று மாலை நடைபெற்ற உயிரியல் விஞ்ஞான பாட பரீட்சையின் போது குறித்த மாணவன் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் உதவியுடன் விடை எழுதியுள்ளார்.

கம்பஹாவின் பிரதான பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடம் குறித்த விபரங்கள் தரவேற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை மோசடியில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன் மாணவனை விடுவித்துள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.