கொழும்பில் பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளருக்கு கொரோனா

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மத்துகம – கொழும்பு சொகுசு பேருந்து ஒன்றின் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

PCR பரிசோதனை மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளதென மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார பரிசோதகர் ஜீ.டி.லயனல் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்தின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் சுய விருப்பத்துடன் முன்வந்து நாகொட வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போதே கொரோான தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா தொற்றியதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய இந்த தாதி பயணித்த பேருந்தின் சாரதி உட்பட குழுவினர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பேருந்தின் நடத்துனரின் மனைவி மத்துகம தனியார் வங்கியில் பணியாற்றுகின்றார். எனினும் கணவருக்கு கொரோனா தொற்றியமை அறிந்தவுடன் மனைவி தன்னார்வமாக பணிக்கு வருவதனை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.