கொழும்பு -10 டி.பி.ஜெயா மவத்தையில் அமைந்துள்ள ஹட்டன் நஷனல் வங்கி (எச்என்பி) டவர்ஸின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
இது குறித்து எச்என்பி வெளியிட்ட அறிக்கையில், அந்த ஊழியர் நேற்று தொற்றுடன் கண்டறியப்பட்டதாகக் கூறியது.
கொரோனா தொற்றுடன் தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த அனைத்து ஊழியர்களையும் இன்று முதல் பணிக்கு வராமல், சுயதனிமையில் இருக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.