சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில்!!

2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் தொடர்ந்­தும் 9ஆவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் 8ஆவது இடத்­தில் உள்­ளது.

மன்­னார் மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 19ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 12ஆவது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. வவு­னியா மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 16ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 18ஆவது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 23ஆவது இடத்­தி­லி­ருந்து 24ஆவது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 20ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 19ஆவது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. கிளி­நொச்சி மாவட்­டம் 2016ஆம் ஆண்டு இருந்த அதே 25ஆவது இடத்­தில் கடந்த ஆண்­டும் உள்­ளது.

மாகா­ணம்
2016ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் 10 ஆயி­ரத்து 562பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­ற­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 60.66 சத­வீ­த­மா­கும். 2017ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் 11 ஆயி­ரத்து 901 பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 66.12 சத­வீ­த­மா­கும்.

தேசிய ரீதி­யில் வடக்கு மாகா­ணம் 2016ஆம் ஆண்­டும் இறுதி மாகா­ண­மாக – 9ஆவது மாகா­ண­மாக இருந்­தது. கடந்த ஆண்­டும் அதே இடத்­தில் உள்­ளது. தென்­மா­க­ண­மா­கவே முத­லி­டத்­தில் உள்­ளது.

மாவட்­டம்
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு 5 ஆயி­ரத்து 847பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 61.98 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு 6 ஆயி­ரத்து 219பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்;சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 67.77 சத­வீ­த­மா­கும்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு ஆயி­ரத்து 38பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 49.31 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 420பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 57.17 சத­வீ­த­மா­கும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு 927பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 57.22 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 158பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 61.46 சத­வீ­த­மா­கும்.

மன்­னார் மாவட்­டத்­தில் 2016ஆம் ஆயி­ரத்து 90பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 63.56 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 251பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 71.44 சத­வீ­த­மா­கும்.

வவு­னியா மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு ஆயி­ரத்து 660பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 65.35 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 853பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 68.53 சத­வீ­த­மா­கும்.