இலங்கையில் நான் தமிழராக பிறந்தது தவறா? தமிழினத்திற்கு எதிரானவனா நான்? மனம் திறக்கும் முரளிதரன்

என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையாக உள்ளது என்று முத்தையா முரளிதரனின் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகரான விஜயசேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.

படத்திற்கான போஸ்டர் வெளியானதையடுத்து அப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலரும், விஜய்சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது, முத்தையா முரளிதரன் தமிழர்கள் செத்து கொண்டிருந்த போது, இன்றைய நாள் இனிய நாள் என்று கூறியவர் என்று அவரைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் விஜயசேதுபதி இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தில் நடிக்கலாமா? வேண்டமா? என்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது முத்தையா முரளிதரன் இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையாக உள்ளது.

ஒரு போதும், நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிவிக்கவும் இல்லை, ஆதரவிக்கவும் மாட்டேன்.

சிங்களவர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்களாக இருந்தாலும், அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles