சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டிடத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.

அரச தொலைக்காட்சிகளில் ஒன்றாகிய சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டிடத் தொகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குறித்த கட்டிடத் தொகுதியிலிருந்து வெளியேறவோ உள்நுழையவோ சுகாதார அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் பணிபுரியும் வீடியோ கமரா ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை குறித்த ஊடகவியலாளர் கடந்த 13ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டிருக்கின்றார்.

இதுதவிர, அதே தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த ஊடக சந்திப்புக்களில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles