உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

கோபியில் மூன்று வயது குழந்தை நிகழ்த்திய உலகசாதனை,அபார நினைவாற்றுலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கோபியை சேர்ந்த பிரதிபா இளமாறன் தம்பதிக்கு ப்ரவ்யா சாய் என்ற மூன்று வயது பெண்குழந்தை உள்ளது.

குழந்தை ப்ரவ்யா சாய் இரண்டு வயது முதலே நிறைய பொருட்களின் பெயர்கள் மற்றும் குழந்தை பாடல்களை மற்றும் பலவகையான நிறங்கள் மலர்கள் காய்கறிகளின் பெயர்களை வேகமாகவும் சரியாகவும் ஞாபகம் வைத்து ஒப்புவித்தார் .

அதனைத்தொடர்ந்து குழந்தை ப்ரிவ்யா சாயின் நினைவாற்றலை கவனித்த அவரது பெற்றோர்கள் மேலும் பல்வேறு நினைவாற்றல் பயிற்சியினை வீட்டிலிருந்தே கற்றுக்கொடுத்தனர்.

மேலும் குழந்தையின் ஒப்புவித்தல் மற்றும் நினைவாற்றல் திறமையினை அவரின் பெற்றொர்கள் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் குழந்தை ப்ரிவ்யாவின் வீடியோவை கவனித்த உலக சாதனை புத்தகத்தினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குழந்தை ப்ரிவ்யா வின் வீட்டிற்கு நேரில் வந்து அவரின் நினைவாற்றலை சோதித்து குறைந்த நேரத்தில் அதிக பொருட்களை ஒப்புவித்து உலக சாதனை நிகழ்த்தியதை அங்கீகரித்து குழந்தைக்கு பதக்கத்தையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கோபி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் பள்ளிஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.