சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா; 3 விடுதிகள் முடக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய வைத்தியசாலையின் 34ம், 35ம், 36ம் இலக்க விடுதிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிவித்திருக்கின்றது.

ஜா-எல வைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாதுடன் குறித்த வார்ட்டுகளில் உள்ள அனைத்து நோயார்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.