மும்பை இந்தியன்ஸ் 165 ரன்கள் குவிப்பு!

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது.

துவக்க விழா மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை மாலை கோலாகலமாகத் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 40, சூர்யகுமார் யாதவ் 43, க்ருணால் பாண்டியா 41* ரன்கள் விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like