காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுபடியாகும் .அது தொடர்பான வர்த்தமானி போக்குவரத்து அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டது.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலக செயற்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.