ஐ.தே.கட்சியிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? வெளிவந்தது அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ளது.

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்திற்கு யாரை அனுப்புவீர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் ருவான் விஜேவர்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

சமீபத்திய நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி தேசியப் பட்டியல் இருக்கைக்கு ஒரு எம்.பி.யை நியமிக்க வேண்டாம் என்ற முடிவை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்ற நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து தொடரும்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை எதிர்த்து யாரையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றும் அவர் கூறினார்