அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவர்களுக்கான 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.