மட்டக்களப்பு புதிய காத்தான்குடியை பூர்வீகமாக லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயிஸ் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த முயற்சியின் முதல்கட்டமாக அவர் இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இணைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பாரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் தற்பொழுது சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கை வரலாற்றில் முதல் முஸ்லீம் பெண் விமானி என்ற பெருமையை றீமா பாயிஸ் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.