நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 609 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேலியகொட மீன் சந்தைத் தொகுதியில் தொழில்புரிந்து வீடு சென்ற இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த சுமார் 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து குறித்த நபர் பொது போக்குவரத்து பயன்படுத்தியுள்ளதுடன், எம்பிலிப்பிட்டிய நகரில் அந்நபர் சென்றுவந்த 42 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.