ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரதான அலுவலம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான பணிகள் மாவட்ட செயலகங்களில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.