மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் திடீரென பதற்றம்! அதிகரித்த கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் தீடீரென கொரோனா அதிகரித்துள்ளதால் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டுமாவடி பிரதேசத்தில் 13 பேரும் வாழைச்சேனை பிரதேசத்தில் இருக்கக்கூடிய மீன் பிடி பிரதேசத்தில் ஏனையவர்களுமாக மொத்தம் 23 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இனம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்வாறு இனம் காணப்பட்டவர்கள் பேலியகொட சென்றுவந்தவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அங்கு கொரோனா அச்சம் தோற்றியுள்ளதனால் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்மரமாக ஈட்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை துறைமுகத்துக்கு பூட்டு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட பதினொரு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று வாழைச்சேனை துறைமுகம் பூட்டப்பட்டுள்ளது என்று துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பலர் பேலியகொடை பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.

அவர்களின் பதினொரு பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் துறைமுகத்தை மூடி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.