விடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கை வரலாறு; போஸ்டர்கள் ரிலீஸ்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘சீறும் புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ‘விடுதலைப் புலிகள்’ என்ற அமைப்பை நிறுவியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக அரசியல் ரீதியாகவும், ஆயுதம் ஏந்தியும் இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு போராட்டங்களை முன்னெடுத்தது.

ஆனால் 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அறத்துடன் போர் செய்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இன்றும் பலரும் தங்களது தலைவராக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சீறும் புலி’ என்ற திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றி, உனக்குள் நான், லைட்மேன், நீளம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் ‘சீறும் புலி’ படத்தை இயக்குகிறார்.

மேலும் அவர் இத்திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஸ்டுடியோஸ் 18 நிறுவனம் தயாரிக்கும் ‘சீறும் புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles