ரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்! உணவகத்தில் தவித்த பெண்

சீனாவில் பெண் ஒருவரை டேட்டிங் அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் செயலால் தலைதெறிக்க ஓடியுள்ள சம்பவம் கொமடியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 29 இளைஞர் ஒருவர் 23 வயது பெண்ணிடம் டேட்டிங் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு குறித்த பெண் ஒப்புக்கொண்டதுடன், அங்கு ஆகும் செலவு அனைத்தினையும் இளைஞரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த இளைஞர் விடுதியில் காத்துக்கொண்டிருந்த போது, அப்பெண் தனது குடும்ப உறுப்பினர் 23 பேருடன் விடுதிக்கு சென்று இளைஞரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

மேலும் இவர்கள் அனைவரும் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் யாரிடமும் சொல்லாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

பின்பு செய்வதறியாது தவித்த இளம்பெண், மீண்டும் இளைஞருக்கு போன் செய்து கட்டணத்தினை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியதையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles