23 வயது கர்ப்பிணி காதலியை கொன்று ப்ரிட்ஜில் வைத்த காதலன்! அமெரிக்காவில் பரபரப்பு..! நடந்தது என்ன?

23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது உடலை காதலன் வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதன பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் செலினா(23).

இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் செலீனாவை கடந்த சில நாட்களாக காணவில்லை.

செலினாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய பொலிசார் சந்தேகத்தின் பேரில் செலினாவின் முன்னாள் காதலரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது செலினாவின் முன்னாள் காதலரின் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் செலினா கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து செலினாவின் முன்னாள் காதலரை கைது செய்துள்ள பொலிசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுவரை கொலைக்கான காரணம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles