தங்க நகைப் பிரியர்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி- தற்போது வெளியான தகவல்..!

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறையும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1903 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

மேலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அண்மைக்காலங்களில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.மேலும், தங்கத்தின் நுகர்வும் 30% குறைவடைந்திருந்தது. இதுவும் விலை அதிகரிப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு இருந்தது

அண்மைய புள்ளி விபரங்களின் படி வரலாற்றில் என்றுமில்லாவாறு இரண்டாயிரம் டொலர் வரை தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.இந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

இலங்கையில் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் அண்மையில் கூறியிருந்தமை நடைமுறையில் சாத்தியமாகலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு கொரோனா தாக்கத்தால் என்றுமில்லாதவாறு தங்கம் விலை உச்சம் தொட்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறையும் வாய்ப்புள்ளதாக வெளியாகும் செய்திகளினால் சற்று நம்பிக்கையிலுள்ளனர் ஏழை, நடுத்தர இலங்கை மக்கள்.

இதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை 1 கிராம் தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 267. 80 LKR ஆகவும் 5 கிராம் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 339.00 LKR ஆகவும் காணப்படுகின்றது. 22 கரட் தங்கத்தின் விலை 1 கிராம் 10 ஆயிரத்து 328.80 LKR ஆகவும் 5 கிராம் தங்கத்தின் விலை 51 ஆயிரத்து 644.00 LKR ஆகவும் காணப்படுகின்றது.

இந்தியாவில் 24 கரட் தங்கத்தின் விலை 50 ஆயிரத்து 859 ஆகவும் 22 கரட் தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 621 ஆகவும் காணப்படுகின்றது.