பெற்ற மகளை கடித்து, பென்சிலால் குத்தி சித்ரவதை செய்த தாய்… கொடுமையை அவதானித்த தங்கை என்ன செய்தார் தெரியுமா?

மும்பையில் ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத 12 வயது மகளை, ஆத்திரத்தில் பென்சிலால் குத்தியும், பல இடங்களில் கடித்தும் கண்டித்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

எப்போதும் போனும் கையுமாக இருப்பவர்கள் கூட, ஆன்லைன் வகுப்பை நினைத்தாலே தலைதெறிக்க ஓடி ஒளிகின்றனர்.

இருப்பினும், பெற்றோர்களும் அவர்களை விடுவதில்லை, ஆன்லைன் வகுப்பில் போட்டி திணித்து வருகின்றனர். இதனால், மனதளவில் பாதிக்கப்படும் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மும்பையில், ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த தாய் தனது 12 வயது மகளை பென்சிலில் குத்தியும், பல இடன்களில் கடித்தும் சித்ரவதை செய்துவந்துள்ளார்.

இதை பார்க்க மனமில்லாத அந்த சிறுமியின் தங்கை 1098 குழந்தைகள் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் என்ஜிஓ அமைப்பை சேர்ந்த இரு நபர்கள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்ததை அடுத்து அவர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles