யாழில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.

குறித்த சம்பவத்தில் றதிஸ்வரன் (தயா) (வயது-49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (02) இரவு 7 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை புகையிரதம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தை கடந்து பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவணைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீவல் தொழில் செய்யும் இவர் நெடுங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பியவேளை பொன்னம்பலம் ரயில் கடவையால் மோட்டார் வண்டியை உருட்டியாறு கடக்க முயன்ற வேளை, ரயில் வருவதை அவதானித்து அவசரமாக கடக்க முயன்றுள்ளார்.

இதன்போது தண்டவாளத்தில் டோட்டார் சைக்கிள் சில்லு மாட்டியதால் மோட்டார் வண்டியை வெளியே இழுக்க முயன்ற போது அவரை ரயில் மோதித் தள்ளியது.

இவரது சடலம் பிரதே பரிசோதனைக்காக பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like