இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குருநகர், பாசையூருக்கு செல்ல நாளை முதல் அனுமதி

குருநகர், பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது;

குருநகர் பகுதியில் இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் இனிவரும் நாள்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

குருநகர் ,பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரால் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும். அங்கு வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம்.

குருநகர் மற்றும் பாசையூர் மீன் சந்தைக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்களோ அல்லது அல்லது வெளியிடங்களிலிருந்தோ வருவோர் கடும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். குறித்த நடைமுறை நாளை காலையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும். குறித்த நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குருநகர் பாசையூர் சந்தைக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் – என்றார்.