பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யாழ் வலி வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது

வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது

39 உறுப்பினர்களைக்கொண்ட வலிகாம்ம் வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி யினர் 8 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசினர் 6 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் 4 உறுப்பினர்களையும் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தலா 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட நிகேதன் ஆகியோருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது

இதில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட சோமசுந்தரம் சுகிர்தன் 30 வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட நிகேதன் 6 வாக்குகளையும் பெற்றார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

அதைத்தொடர்ந்து இடம்மெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவர் வாக்கெடுப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்