கனவில் கூட சாத்தியமாகாது – அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையினை ஒருபோதும் கைச்சாத்திடப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் கடந்த புதன்கிழமை நான் நடத்திய பேச்சுக்களின் போது இது தொடர்பில் பேசவில்லை.

எம்.சி.சி. உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திட்டால் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக சிலர் சொல்கின்றார்கள்.

நாம் கனவில்கூட அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை.

சிலர் தமது ஆதரவாளர்களை உணர்வூட்ட இவ்வாறான உரைகளை நிகழ்த்துகின்றார்கள் என்றார்.