இலங்கையில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவு இன்று பதிவாகியுள்ளது.

வெளிசற பகுதியில் உள்ள சுவாச நோய் சார்ந்த வைத்தியசாலையில் கடந்த 23ம் திகதி அனுமதிக்கப்பட்ட மஹர பகுதியை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கு சுவாசம் சார்ந்த நோய் மற்றும் இரத்த அழுத்தம் என்பன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று இருக்கவில்லை. எனினும் நேற்று அவர் உயிரிழந்த பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.