மட்டக்களப்பில் அரச திணைக்கள உத்தியோகத்தருக்கு நிகழ்ந்த அநீதி; வெட்கப்பட வேண்டிய விடயம்

மட்டக்களப்பு நகர, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சீருடை அணிந்த அரச திணைக்கள உத்தியோகத்தருக்கு நிகழ்ந்த அநீதி மிகவும் வெட்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த கொரொனா காலத்தில் மிகுந்த கஸ்ரங்களுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் சீருடை அணிந்த அரச திணைக்கள உத்தியோகத்தர்களது அர்ப்பணிப்புடனான சேவை பாராட்டப்பட வேண்டியது.அதில் எந்த மாற்றுக்கருத்துமே இல்லை

இந்தக் காலகட்டத்தில் அவர்கள் ஏதாவது ஒரு தேவையை எதிர்பார்த்து எம்மிடம் வந்தால் முதல் வேலையாக அவர்களுடைய தேவையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இந்நிலையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றையதினம் தனது தேவை நிமிர்த்தக் விஜயம் செய்த மேற்படி சிருடை அணிந்த அரச திணைக்கள உத்தியோகத்தர் தனது திருமணச் சான்றிதழ் தேவை என விண்ணப்பித்துள்ளார்.

அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் கையில் தரமுடியாது தபால் மூலமே அனுப்ப முடியும் என்று கூற; அவரும் இல்லை தனக்கு இன்று அவசரமாக தேவை என தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் உதவிப் பிரதேச செயலாளருக்கும் பின்னர் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டது பின்னர் அவருடைய தலையீட்டில் உடனடியாக இதன் பிரதியை எடுத்து கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

குறித்த அரசு ஊழியர் தனது அறையில் சென்று விட்டு பிரதி எடுக்கும் இயந்திரத்தின் toner முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

அந்த சீருடை அணிந்த அரச திணைக்கள உத்தியோகத்தர் தெரியப்படுத்திய விடயம் என்னவென்றால் நேற்று மாலை தனது மகனது பிறப்புச் சான்றிதழது பிரதியை எடுத்ததாகவும் இன்று காலை எவ்வாறு toner முடிவுறும் என்றும் தனது கண் முன்னே பலர் அங்கே பிரதி எடுத்துச் செல்வதாகவும் மிகுந்த ஆதங்கத்துடன் தெரியப்படுத்தினார்.அதன் பின்னர் அவருக்கும் உடனே பிரதி எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.இதனை முதலிலே செய்திருக்க வேண்டும்.

அன்பான அரச உத்தியோகத்தர்களே! இந்தக் கொரோனா காலத்தில் சீருடையணிந்த உத்தியோகத்தர்கள் யாராவது சேவை நாடி வந்தால் அவர்களுடைய தேவையை முதலில் நிறைவு செய்து கொடுங்கள்.

இன்றைய நிலையில் அவர்களே எமது தெய்வங்கள்!

முகநூல் பதிவில் இருந்து….