கனடாவில் நபரொருவர் சுட்டுக் கொலை! 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் கைது

கனடாவில் 33 வயது நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டொரன்ரோவை சேர்ந்த Shane Shannon Stanford (33) என்ற நபர் கடந்த மாதம் 7ஆம் திகதி சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் Shane கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் Raheem McLaughlin (27) என்ற இளைஞர் மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் 17 வயது சிறுமியின் அடையாளங்களை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக 416-808-7400 என்ற இலக்கத்தை அல்லது www.222tips.com என்ற இணையத்தள முகவரியை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles