முல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பிறந்த பசுக்கன்று! (Video)


முல்லைத்தீவில் இரண்டு கால்களை மட்டும் உடைய அதிசயக் கன்று பிறந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே நேற்று (புதன்கிழமை) மேற்படி கன்று பிறந்துள்ளது.

முன்னங்கால்கள் இரண்டும் முற்றாக இல்லாத நிலையில் உள்ள குறித்த பசுக்கன்று உணவருந்தக்கூட எழுந்து நிற்க முடியாத நிலையில் சிரமப்படுகின்றது.

குறித்த பசுக்கன்றினை வெளியூரைச் சேர்ந்த மக்கள் உட்பட அப்பிரதேச மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவுக் கடற்கரைப் பிரதேசத்தில் இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றதை அப்பிரதேச மீனவர்கள் அவதானித்திருந்ததுடன், அது குறித்து அச்சமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.Get real time updates directly on you device, subscribe now.

You might also like