யாழ் நல்லூரில் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

நல்லூர் பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயத்துக்குட் பட்ட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை வைத்திருந்த இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரியாலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மறவன்புலவு மற்றும் கைதடி – நாவற்குழி தெற்கு பகுதிகளிலுள்ள இரண்டு குடும்பங்களே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து வருகை தந்த கொரானா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் வர்த்தக நிலையத்தில் பணியாளர்களின் குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.