வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் பாடசாலை மாணவர்கள் இருவர் 9ஏ சித்தி!


வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய  மாணவர்கள் இருவர் 9ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வருடம் 2017 ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரிட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகின.

இந்நிலையில் நானாட்டான் மகா வித்தியாலய மாணவர்களான ஜீவாஜெயதீசன் அனோ ஜெயந் மற்றும் அருட் பிரகாசம் டினேசியஸ் ஆகிய இரு மாணவர்களுமே 9ஏ சித்திபெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகளவான மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும், அதிமான மாணவர்கள் உயர்தரம் கல்விகற்க தகுதிபெற்றுள்ளதாகவும் கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like