அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியாகியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் (CAA) அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசியை விநியோகிக்க முடியும் என்றார்.
அதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.