க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளி, பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 மாணவர்கள் 5,116 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். 

இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like