சண்டையில் காயமடைந்து வைத்தியசாலைக்கு வந்த சமையல்காரருக்கு கொரோனா !

ஹெட்டிப்பொல ஹோட்டலில் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் தொடர்பில் 4 பொலிஸார் மற்றும் தாதிமார் உட்பட 39 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹெட்டிப்பொல ஹோட்டலில் சேவையாற்றிய ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையில் காயமடைந்து ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஊழியருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் 42 வயதுடைய போகஹவெல நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த நபர் ஹெட்டிப் பொல பொலிஸ் பிரிவில் பரம்பொல ஹோட்டலில் சமைப்பதற்காக கடந்த கடந்த மாதம் 19 இணைந்து கொண்டவர்.

கடந்த 26 ஆம் திகதி அந்த ஹோட்டலில் சேவையாற்றிய ஊழியர்களுக்கிடையே சண்டையில் சிக்கிக் கொண்டராவர்.

அந்த நபர் 26 ஆம் திகதி மாலை வேளையில் ஹெட்டிப்பொல பொலிஸில் முறைப்பாட்டை வழங்கி விட்டு ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் தனக்கு அதிகமான தலைவலி இருப்பதாகக் கூறியதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் இருந்து குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவருக்கு தலையில் எந்தவிதமான பாதிப்புமில்லை என வைத்திய அதிகாரி வழங்கிய பரிசோதனையினை அடுத்து கடந்த 28 ஆம் திகதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் இருந்து சென்ற நபர் பிங்கிரிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஹல்மில்லவெவ பிரதேசத்திலுள்ள குடும்ப உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் மீண்டும் சிலாபம் வைத்தியசாலையில் மருந்து எடுக்கச் சென்றார், பின்னர் அவர் உறவினர் வீட்டுக்கே சென்றுள்ளார்.

மீண்டும் உறவினர் வீட்டில் இருந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வைத்தியசாலையில் வைத்து இந்த நபருக்கு பி. சீ. ஆர். பரிசோதனை மேற்கொண்ட போது கொரொனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles