முல்லைத்தீவு- வெலிஓயா கிராமத்தில் 11 வயதுடைய சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிஓயாப்பகுதியில் வீட்டிற்கு ஆங்கிலம் கற்கச்சென்ற சிறுமியிடம் குறித்த ஆசிரியர் , தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் காரணமாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை, வெலிஓயா பொலீசார் ஹெப்பட்டிகொலவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவ அறிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.