தொழிலாளர் தேசிய சங்க அலுவலகம் மீது தாக்குதல்!

கொட்டகலை பத்தனை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் இன்று (புதன்கிழமை) தாக்கப்பட்டதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்த இனந்தெரியாதவர்களே குறித்த காரியாலம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் அலுவலக கணணி மற்றும் நாற்காலிகள் உடைக்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

தாக்குதல் மேற்கொள்ளும் போது அலுவலகத்தில் இரண்டு பணியாளர்கள் கடமையில் இருந்துள்ளதாகவும், இவர்கள் கூச்சலிட்டதன் காரணமாக தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியதாகவும் குறித்த பணியாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like