சம்பளத் திகதி பின்னகரும் என்பதால் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் சதி !

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே தமக்கான ஊதியத்தை பெற்றுக்கொள்ள துணைவேந்தர்,பீடாதிபதிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் பல்கலைக்கழக நிதியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகள் கோரப்பட்டுள்ளது.

கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்திற்கு ஆதரவாக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கமும் யாழ்.பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்நிலையில் தமது இம்மாத ஊதியத்தினை தயாரித்து வழங்க துணைவேந்தர்,பீடாதிபதிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் பல்கலைக்கழக நிதியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தை விடுத்து சம்பள கொடுப்பனவு காசோலைகளில் ஒப்பமிட நிதியாளரை அச்சுறுத்தியுள்ளதுடன் அவரது ஒப்பமற்ற காசோலைகளை வங்கியில் கையளித்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டமையினையும் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை முழுவதுமாக பல்கலைக்கழகங்களின்; கல்வி சாரா ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசிற்கு எதிராக போராடிவருவது தெரிந்ததே.